Azhage Azhagu அழகே அழகு


அழகே அழகு!
தேடித் தேடிப் பார்த்தாலும்
திக்கெட்டும் அலைந்தாலும்
கைக்கெட்டாத கடவுள்
கண்ணெட்டும் தூரத்தில்
நமக்குள்ளே ஒளிந்திருந்து
நம் வரவை எதிர்பார்த்து
காலம் காலமாய் கருணையுடன்
அமைதியாக அமர்ந்திருக்கும்
அழகே அழகு!
தீய வழக்கங்களின் பிடியில் சிக்கி
திண்டாடி அலைந்து திரியும் பொழுது
மெல்லக் காதில் கிசுகிசுத்து மனதை மாற்றி
மேல் நோக்கி செல்லும் ஆசையை
மிருதுவாக உட்செலுத்தி அது வேலை
செய்யும் நேரம்வரை காத்திருந்து
கை கொடுத்து அழைத்துச் செல்லும்
அழகே அழகு.
Continue reading in the book.