Sindhu Nadhiyin Misai Song

This song is part of the Bharathiyar song Bharata Desa Menru Peyar Solluvar.
The song that is played has the following stanzas as well as the interludes played in the film.
Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Gangai nadhi purathu kodhumai pandam
Kaaveri vettrilaikku maaru kolvom
Singa marattiyar tham kavidhai kondu
Cherathu thandhangal parisalippom
Singala theevinikoor paalam amaippom
Sedhuvai medu uruthi veedhi amaippom
Vangathil odi varum neerin migaiyaal
Maiyathu naadugalil payir seiyuvom
In the film 'Kai Kodutha Deivam' two Telugu stanzas are added which I have not included. The original Bharati song does not include it. The complete song goes on like this:
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் – மிடிப்
பயம்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
பள்ளி தலமனைத்தும் கோயில்செய்கு வோம்
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்
வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே
பட்டினில் ஆடையும் பஞ்சிலுடையும்
பண்ணி மலைகளென வீதிகுவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவைகொடுப்போம்
சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம்
பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டிவிளை யாடிவருவோம்
சாதி இரண்டொழிய வேறில்லையென்றே த
மிழ்மக்கள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர் ; கீழவர்மற்றோர்
கங்கை நதிபுறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுத் தானத்து வீரர்தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கமளிப்போம்
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற்போம்
வானைஅளப் போம்கடல் மீனைஅளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற்போம்
ஆயுதம்செய் வோம்நல்ல காகிதம்செய்வோம்
ஆலைகள்வைப் போம்கல்விச் சாலைகள்வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள்செய்வோம்
குடைகள்செய் வோம்உழு படைகள்செய்வோம்
கோணிகள்செய் வோம்இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய்வோம்
காவியம் செய் வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலைவளர்ப் போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம்செய் வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
தொழிலனைத்தும் உவந்துசெய்வோம்