Soft Blue Teddy Bear
மூலக்கதை குஜராத்தியில்
Harbans Patel
Dr.Harbans Patel has published two poetry collections: Amastu and Acharaj. Two short story collections: Chokat no gulam andLaghuGuru, Two books on Satair: Hasyam Tiryakam and Hasyam Rangam. All the books are in Gujarati Language.
மென்மையான நீலக் கரடி பொம்மை
ரமுஜிலால் சாதாரணமா ஒரு ‘நார்மால்’ மனிதன்தான் ஆனால் இப்பொழுது அப்நார்மலா மாறிவறான்னு எனக்குத் தோன்றுகிறது. ஏன்னா இந்த முழு உலகமும் அதில்லாம உலகத்துலே நடக்கறதெல்லாமே அவனுக்கு அப்நார்மலா தெரிகிறது.
இப்பதான் கொஞ்சநாள் முன்னாலே என்கிட்டே சொல்றான், “இந்த உலகமே அப்நார்மலா ஆயிடுத்து. இதை கொஞ்சம் நார்மலாக்கணும்.” இப்படி சொல்லிட்டுச் சின்ன குழந்தைமாதிரி சிரிச்சுக்கிட்டே போயிட்டான்.
கொஞ்சநாள் கழிச்சு பார்க்கும்போது சொல்கிறான், “அப்நார்மல் உலகமில்ல. நாமதான் அப்நார்மலா இருக்கோம். நாம்ப விஷமத்தவிட்டா இந்த உலகம் நார்மலா தெரியும்!” இவ்வளவு சொல்லிவிட்டு நான் ஏதாவது பதில் சொல்வதற்கு முன்பே சென்றுவிட்டான்.
மற்றொரு நாள் ரஜனி கேட்டான், ‘இந்த ராமுஜிலால் பேச்சு தெரியுமா?’
‘என்ன?’, நான் கேட்டேன்.
அப்பொழுது ரஜினி சொல்கிறான், ‘‘நேத்து காலங்கார்த்தாலே ஹரீஷ் வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சீப்பு பரிசா குடுத்திருக்கிறான்!’
ஹரீஷ் எங்க ‘காமன்’ நண்பன். பேச்சக்கேட்டு ரஜனியப் போலவே எனக்குக்கூட ஆச்சரியமாக இருந்தது. ஏன்னா ஹரீஷ் சுத்த மொட்டை, அப்படியிருக்கும்போது அவனுக்கு சீப்பு பரிசா கொடுக்கறது அவமானம் செய்யறது போலத்தானே. நான் ரஜினிகிட்ட சொன்னேன், ‘ராமுஜிலாலுக்கு புத்தி கெட்டிருக்கும் இல்லேனா புத்தி கெடுவதற்கான அறிகுறியாக இருக்கும்.’
ரஜனி என் பேச்சை ஒத்துக்காம சொல்றான், ‘நம்ப எல்லார் புத்தியையும் கெடுத்தபிறகும் தன் புத்தியை கெடாமல் வைத்திருக்கும் அளவு திடமானவன் அவன். நீ ராமுஜிலாலே ‘அண்டர்எஸ்டிமேட்’ செய்யாதே.’
Read more from the book...